கார்த்தியின் ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடக்கம்…!

தீபாவளி முன்னிட்டு ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆனால் கன்னடத்திழும் இந்தியிலும் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுவிட்டதால் இமொழிகளில் ரீமேக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி