வெளியானது கார்த்தியின் ‘கைதி’ பட டீசர்…!

 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கைதி’ கதாநாயகியே இல்லாத இந்தப் படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சிறையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கார்த்தியைப் பிடிக்க போலீஸ், ரவுடிகள் எனக் கூட்டமே காத்திருக்க லாரி ஓட்டியபடி வரும் கார்த்தி அனைவரையும் அவரவர் இடத்திலேயே சென்று சந்திப்பது போல வரும் பரபரப்பான ஆக்‌ஷன் டீசர் இது.

கார்ட்டூன் கேலரி