டொரொன்டோ இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் கார்த்தியின் ‘கைதி’….!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் கைதி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தற்போது இந்த படம் டொரொன்டோவில் நடக்கும் இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி