கஜா புயலால் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சேதம்

கஜா புயல் காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள ஆலயத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கரையைக் கடந்த கஜா புயல், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, சிவகங்கை மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அதோடு, மின்கம்பங்கள், அலைபேசி கோபுரங்களும் பல இடங்களில் சாய்ந்துவிட்டன.  அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த ஐநூறுக்கும்  மேற்பட்ட வாகனங்கள் தஞ்சையிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

இதற்கிடையே கஜா புயலின் பாதிப்புக்கு பிரபலமான வேளாங்கண்ணி மாதா ஆலயமும் தப்பவில்லை.   ஆலயத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. தவிர வேளாங்கண்ணியில் பல வீடுகள் புயலால் சேதமடைந்துவிட்டன.