கஜா புயல் எச்சரிக்கை… பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஜா புயல் எச்சரிக்கை காரணமாக ஐந்து மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

கூரை வீடுகள் மற்றும் ஷீட் வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.   தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பும் படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் யல் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், நாகை , புதுக்கோட்டை  ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதேபோல புதுச்சேரியின்  காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.