கஜா புயல் பாதிப்பு கணக்கீடு 85 சதவிகிதம் முடிவு: சுகன்தீப் சிங் பேடி

சென்னை:

ஜா புயலினால் ஏற்பட்டுள்ள  பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுப்புகளில், இதுவரை 85 சதவிகித பணிகள் முடிவு பெற்றுள்ளதாக வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர்  சுகன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

கடந்த 16ந்தேதி கஜா புயல் தாக்குதலுக்கு நாகை மாவட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மைதுறை அலுவலர்கள் மூலம் பாதிப்புகள் குறித்து கண்கெடுப்பு  நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பேடி,  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 85% கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன என்று கூறினார். மேலும்,  பாதிக்கப்பட்ட மரங்கள் கணக்கெடுப்பில் விட்டுப்போனால் குறை தீர்ப்பு கூட்டத்தில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம் என்றவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மர வியாபாரிகளை கொண்டு மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

கஜா புயல் பயிர்சேத கணக்கெடுப்பை விரைந்து முடிக்க விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்  அவர் கூறினார்.