கஜா புயல் நிவாரணப்பணி:  களத்தில் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

--

ஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நிவாரணப்பணிகளில் இறங்கியுள்ளனர்.

நேற்று இரவு வீசிய கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமான மரங்கள் சாய்ந்துகிடக்கின்றன.  வீடுகள், சாலைகள் மீது விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவது பெரும் சாவாலாக உள்ளது. மின்சார கம்பங்களும் சாய்ந்து கிடக்கின்றன.

இவற்றை  அகற்றி சரிசெய்யும் பணிகள் தற்பொழுதே பல இடங்களில் துவங்கியிருக்கின்றன. இதில் அரசு நிர்வாகம் முழு வீச்சில் இறங்கியிருக்கிறது. அதே நேரம் சில இடங்களில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த நிலையில் தேவையான இடங்களில் மக்கள் நீதி மய்ய கட்சியினர் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளனர்.

தஞ்சை  நாஞ்சிக்கோட்டை ஈ.பி. காலனி பகுதியில் விழுந்து கிடந்த மரங்களை தஞ்சை மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் சரவணன் தெரிவித்ததாவது:

“கஜா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தஞ்சை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு அணி உருவாக்கப்பட்டது. தற்போது புயல் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறோம்.

வல்லம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் தவித்த சுமார் 300 பேர்  அரசு மேல் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குதே தேவையான அடிப்படை வசதிகளை செய்யதில் ஈடுபட்டிருக்கிறோம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக தாசில்தார் கண்ணன் பேரிடர்  மீட்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசினோம். அவர், . பட்டுக்கோட்டை அருகே  கடற்கரை பகுதியில்தான் அதிகமான உதவி தேவைப்படுகிறது என்றார். ஏற்கெனவே அங்கு தஞ்சை தெற்கு பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உதவி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து நாங்களும் உதவி செய்ய சென்றுகொண்டிருக்கிறோம்” என்றார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பான “காஜா நிவாரண பணிக்குழு குறித்த விவரத்தையும் தெரிவித்தார். அது கீழே..