கஜா புயல் பாதிப்பு: பல மாவட்டங்களில் மேலும் சில மணி நேரம் கனமழை தொடர வாய்ப்பு

நாகை:

திகாலை கரையை கடந்துள்ள கஜா புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை காற்றும் சூறாவளி இன்னும் சில மணி நேரம் தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நள்ளிரவு 12 மணி அளவில் கரையை தொட ஆரம்பித்து, அதிகாலை 2.30 மணி அளவில் வேதாரணயத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மணிக்கு 120 கிலோ மீட்ட வேகத்தில் வீசிய  பேய்க்காற்று நாகை மாவட்டம் கடுமையான சேதத்தை விளைவித்து உள்ளது.

புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் மேலும் சில மணி நேரம் தொடரும் என்று வானிலை மையம் கூறி உள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் வேகம் குறைந்த நிலையில் சூறாவளி காற்றும் வீசி வருகிறது.

இதன் காரணமாக புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேலும் சில மணி நேரம் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உ ள்ளது.‘