‘கஜா’ எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை! தமிழ்நாடு அரசு

சென்னை:

மிழகத்தை மிரட்டி வரும கஜா புயல் காரணமாக, தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாகதமிழகஅரசு அறிவித்து உள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்  கஜா புயலாக மாறி உள்ளது.  தற்போது, இந்த புயல் சென்னைக்கு வடகிழக்கே 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து, தமிழக கரையோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

வரும் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது வடதமிழத்கத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும். இதனால் 15 தேதி வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கு அருகே வரும் போது 120 கிமீ வரை காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கஜா புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளது. மேலும், கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உளளது. புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்குத் தெரிவிக்க, 24 மணி நேரம் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் அனைவரும் அவர்களது அலைபேசி மூலம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு தேவையான  விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும்,  புயல் உருவாகும் முன், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்ற தங்குகடல் மீன்பிடி விசைப்படகுகளை பத்திரமாக கரை திரும்பிட ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.