கஜா புயல்… அதிதீவிர புயலாக வலுப்பெறும்!

ட்டுகி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என்றும் இதனால் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் . இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

சென்னை மற்றும் நாகையில் இருந்து சம தொலைவில் (380 கிலோ மீட்டர்) மையம் கொண்டிருக்கும் கஜா புயல், இன்று மாலை அல்லது இரவு பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் என அறவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 6 கி.மீ. தூர வேகத்தில் வந்துகொண்டிருந்த கஜா புயல் தற்போது வேகம் கூடி மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.

ஆகவே இது இன்னும் 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும்,  காற்றின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரை தொடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், ஆகிய  பகுதிகளில் சேதம் ஏற்படும் எனவும்  கூரை வீடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.