தேனிலவை முடித்துக்கொண்டு சென்னை வந்த காஜல் அகர்வால்: தமிழ் ஷுட்டிங்கில் பங்கேற்றார்..

 

சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் காதலர் கவுதவை கரம் பிடித்த காஜல் அகர்வால், மாலத்தீவுக்கு தேனிலவு சென்றிருந்தார்.

கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ள ஓட்டலின் சொகுசு அறையில் தங்கி, தேனிலவை கழித்த காஜல், அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான போட்டோக்களை வலைத்தளங்களில் வெளியிட்டார்.

முப்பது நாள் மோகம் முடிந்த நிலையில் கணவருடன் அண்மையில் சென்னை வந்தார் காஜல். ‘காட்டேரி’ பட இயக்குநர் ‘டிகே’ டைரக்ட் செய்யும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

திகில் சித்திரமாக உருவாகும் இந்த படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகிகள், அதில் ஒருவர், காஜல் அகர்வால்.

இந்த படத்தின் ‘போட்டோ ஷூட்டில்’ காஜல் கலந்து கொண்டு நடித்துள்ளார்.

‘டிகே’ யின் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஏற்கனவே காஜல் நடித்துள்ளார்.

கமலஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் – 2’ படத்தில் நடித்து வரும் காஜல் அந்த படத்தை முடித்து விட்டு, டிகே படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

– பா. பாரதி