விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கிறார் காஜல் அகர்வால்….!

 

 

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Awe’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாகவும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இந்த படம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், வரும் டிசம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ave, Kajal Agarwal, telugu, vijay sethupathi!
-=-