தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நாளில் இருந்து கணவருடன் எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காஜல் அகர்வால் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கணவருடன் தேனிலவு செல்ல உள்ளதாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் புகைப்படத்தை அவர் போட்டுள்ளார், ஆனால் எங்கே செல்கிறார்கள் என்பது குறித்து ஏதும் பதிவிடவில்லை .