‘காட்டேரி’ படத்தின் ‘என் பேரு என்ன கேளு’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு….!

தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸின் கீழ் K. E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.

டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

https://twitter.com/thinkmusicindia/status/1272057925285052416

இந்நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘என் பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஸ்ரீகாந்த் வரதன் எழுத ஜோனிட்டா காந்தி பாடியுள்ளார்.