தாஜ் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற காஜல் அகர்வால் திருமணம்…..!

மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்லுவுடன் காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

அக்டோபர் 30-ம் தேதி இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதை சில தினங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் உறுதி செய்தார்.

கொரோனா அச்சுறுத்தலால் நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு – காஜல் அகர்வால் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாயின.

காஜல் அகர்வாலுடன் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்குத் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.