நடிகை காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவி….!

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாகரதமர் மோடி அறிவித்தார் .

ஊரடங்கு உத்தரவால் ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சம் என மொத்தமாக ரூ.6 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதுதவிர தன்னிடம் உதவி கோரிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.