பாய்ஃபிரண்ட் ரகசியத்தை உடைத்த காஜல் அகர்வால்.. படத்தை வெளியிட்டு ஏக்கம்..

டிகை காஜல் கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வது, கேக் செய் வது என்று நேரத்தை போக்கிக்கொண்டிருக்கிறார். இதுநாள்வரை தனது பாய்ஃபிரனட் யார் என்று சொல்லாமல் மறைத்து வந்த காஜல் அகர்வால் இன்று அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.
சிட்டா, கவசம் என இரண்டு தெலுங்கு படங் களில் ஹீரோ பெல்லம் கொண்டா ஸ்ரீனிவா ஸுடன் இணைந்து நடித்தார் காஜல். அப்போது இருவருக்கும் நட்பு மலந்தது. இரு வரும் காதலிப்பதாக வந்த கிசுகிசுக்களை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு இருவரையும் வெவ் வேறு திசையில் பிரித்து வைத்திருக்கிறது, காஜல் மும்பையிலும், ஸ்ரீனிவாஸ் ஐதராபாத் திலும் இருக்கின்றனர். ஸ்ரீனிவாசை சந்திக்க முடியாமல் தவிக்கும் காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீனிவாசை கட்டிப்பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டு ’உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன்’என தெரிவித்திருக்கிறார். அதே படத்தை ஸ்ரீனி வாஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து , ’நான்தான் ரொம்ப மிஸ் செய்கிறேன். நான் உன்னை வந்து பார்க்க முடியாத நிலையில் நீ அப்படி சொல்லக்கூடாது’ என பதில் அளித்திருக்கிறார்.


காஜல் அகர்வாலுக்கு தங்கை நிஷா அகர் வாலுக்கு கடந்த 7 வருடத்துக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. அவர் ஒரு குழந்தைக்கும் தாய் ஆகிவிட்டார். அடுத்து காஜலை திருமணம் செய்யச்சொல்லி குடும்பத்தினர் கூறிவரும் நிலையில் தனது பாய் ஃபிரண்ட் ரகசியத்தை உடைத்திருக்கி றார் காஜல் அகர்வால். காஜல் தற்போது இந்தியன் 2, விஜய் நடிக்கும் 65வது படம் என 2 படங்களில் நடிக்கிறார். பாய்ஃபிரண்ட் ரகசியத்தை உடைத்த காஜல், காதல் ரகசியத் தையும் வெளிடலாமே என்று நெட்டிஸன்கள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.