சிரஞ்சீவி படத்துக்கு உடனடி கால்ஷீட்: ’’ஹனிமூனை’’ தள்ளிவைத்த காஜல் அகர்வால்

 

நடிகை காஜல் அகர்வால் – தொழில் அதிபர் கவுதம் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கமலஹாசனுடன் ‘இந்தியன்’ சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’’ ஆகிய படங்களில் காஜல் அகர்வால் இப்போது நடித்து வருகிறார்.

இவற்றில் கொரோனா காரணமாக ‘ஆச்சார்யா’ படத்தின் ஷுட்டிங், பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆச்சார்யா ஷுட்டிங்கை மீண்டும் நடத்த சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.

அந்த படத்துக்காக காஜல் அகர்வால், தனது ஹனிமூனை தள்ளிவைத்துள்ளார். கல்யாணம் முடிந்த கையோடு 15 நாள் ஓய்வில் இருக்கும் காஜல், அதன் பின் ‘ஆச்சார்யா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்த பின்னர் டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அவர் தேனிலவு செல்வார் என தெரிகிறது.

இதற்கிடையில் இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் பட்சத்தில், காஜலின் ஹனிமூன் மேலும் தள்ளிபோகலாம்.

– பா.பாரதி