பலரின் கவனத்தை ஈர்க்கும் காஜல் அகர்வாலின் தாலி….!

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காஜல் அணிந்திருந்த உடையை விட அவர் கழுத்தில் இருந்த தாலி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

வைரக்கல் கொண்ட தாலியை அணிந்திருந்தார் காஜல் அகர்வால். இதே மாடல் தாலி தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அணிந்திருப்பார். ஆனால் தீபிகாவின் தாலியில் வைரத்திற்கு பதில் சாலிடெய்ர் இருக்கும்.