விஐபி 2 : மலேசிய அதிபர் மனைவியை சந்தித்த கஜோல் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

--

மலேசியா

வி ஐ பி 2 பட வெளியீட்டுக்காக மலேசிய அதிபர் மனைவியை சந்தித்த புகைப்படத்தை நடிகை கஜோலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர்.

மலேசியாவில் தமிழ்ப் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  தற்போது வெளிவரப் போகும் வி ஐ பி 2 படத்துக்கான ப்ரொமோவுக்காக நடிகை கஜோல் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மலேசியா சென்றுள்ள நிலையில் அவர்கள் இருவரும் தற்போது மலேசிய அதிபரின் மனைவியை சந்தித்தனர்.  அந்த சந்திப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்கள் இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர்.

இந்த புகைப்படத்துக்கு கிட்டத்தட்ட 90000 லைக்குகள் இதுவரை கிடைத்துள்ளன