பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம்…!

--

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார்.

ரஞ்சித்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் மாரி இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். கலையரசனுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அரவிந்த் ஆகாஷ் நடிக்கிறார்.படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டன. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

You may have missed