2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

நடிகர்கள்: கார்த்தி, பிரபுதேவா, விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் ஆண்டனி, சந்தானம், பாண்டியராஜன், பிரசன்னா, சூரி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ், பாண்டு, சிங்கமுத்து, சிவன் சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

நடிகைகள்: குட்டி பத்மினி, நளினி, சாரதா,காஞ்சனா, பிரியாமணி, ராஜஸ்ரீ, எஸ்.என்.பார்வதி, பி.ஆர்.வரலட்சுமி, ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசிரியர் யுகபாரதி, நடன இயக்குனர்கள் புலியூர் சரோஜா, தாரா ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோரத்னம், பின்னனி பாடகர்கள் எஸ்.ஜானகி, சசிரேகா, மாலதி, அபஸ்வரம் ராம்ஜி, கிருஷ்ணராஜ், உண்ணிமேனன், உலகநாதன், கானாபாலா, வேல்முருகன், பரவை முனியம்மா. ஒளிப்பதிவாளர்கள்: பாபு, ரத்னவேலு, ரவிவர்மன் , புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி ஆகியோருக்கும்  கலைமாமணி விருது வழங்கப்பட்டது.