சென்னை:

பிரபல கர்நாடக இசைப்பாடகரும், மகசேசே விருது பெற்றவருமான  டி.எம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீடு விழா, கலாசேத்ரோ வில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே வழங்கியை அனுமதியை திரும்ப பெறுவவாக கலாசேத்ரா நிர்வாகம் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, டி.எம்.கிருஷ்ணா வெளியிட உள்ள புத்தகத்தில் அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையைக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகவும், இதுபோன்ற  எந்தவொரு திட்டத்தையும் எங்களால்  அனுமதிக்க முடியாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ம்ஆண்டுகான ரமோன் மகசேசே விருதுகள்  அறிவிக்கப்பட்ட 2 இந்தியர்களில் ஒருவர் கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா. இவர் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட தற்போது கலாசேத்ரா ஏற்கனவே வழங்கிய அனுமதி திரும்ப பெற்றுள்ளது. இது எழுத்தாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக இசைப்பாடகரான டி.எம்.கிருஷ்ணா, கிறிஸ்தவ, இஸ்லாமிய பாடல்களையும் பாடி வருகிறார். அதுபோல இடதுசாரி சிந்தனை உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த ஆண்டு நவம்பர்  மாதம் 12ந்தேதி டெல்லியில், டிஎம். கிருஷ்ணாவின் கர்நாடக இசை கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தான் யார் என்பது குறித்து ஏற்கனவே கூறியுள்ள டி.எம்.கிருஷ்ணா,  ”நான் பிராமணனா… இல்லையானு கேட்டால், ‘இல்லை’னு சொல்லத்தான் மனசு விரும்புது. ஆனா, உண்மையில் ‘நான் அப்படி இருக்கேனா?’னு எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன். சாதியை மீறிப் போகணும்னு யோசிக்கிறப்ப, அது இன்னும் உக்கிரமா எழுந்து வருமோங்கிற சிந்தனையும் ஓடுது. அதனால, ‘சாதி இருக்கு’னு ஏத்துக்கிட்டு, ஒரு சூழல்ல அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை நானே உருவாக்கிக்கணும்னு நினைக்கிறேன்!”  என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.