“கலாம் சாட்” தயாரித்த தமிழக மாணவர்கள் உலக விமான கண்காட்சியில் பங்கேற்பு!

மாஸ்கோ,

லாம் சாட் என்ற உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை தயார்த்து விண்ணுக்கு அனுப்பியது “ஸ்பேஸ் கிட்ஸ்” அமைப்பின் மாணவா்கள் உலக விமான கண்காட்சியில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளனர்.

இது இந்தியா மட்டுமின்றி தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவன் முகமது ரிஃபாத் ஷாரூக் ஒரு போட்டிக்காக கலாம் சேட் என்ற கையடக்க செயற்கைகோளை கண்டுபிடித்துள்ளார்.

நாசா மற்றும் ‘I Doodle Learning’ நடத்திய ‘Cubes in Space’ என்ற போட்டிக்காக அவர் 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில், அது 64 கிராம் எடையில்  இதனை உருவாக்கியுள்ளார். அதற்கு “கலாம் சாட்” எனப் பெயரிப்பட்டுள்ளது.

முகமது ரிஃபாத் ஷாரூக் உடன்  யக்னா சாய், வினய் பரத்வாஜ், தனிஷ்க் திவேதி, கோபிநாத் மற்றும் முகம்மது அப்துல் காசிம் ஆகியோர் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர்.

இந்த  “கலாம் சாட்”  என்ற பெயரில் கையடக்கச் செயற்கைக்கோளை சமீபத்தில் நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

இதற்காக தமிழக அரசு 10 லட்சம் வழங்கி இந்த மாணவர்களை கவுரவப்படுத்தியது.

தற்போது தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பினர் ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக விமான கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.

உலகின்  புகழ்பெற்ற விமானக் கண்காட்சி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதி லிருந்து 87 நாடுகளை சேர்ந்த முண்ணனி விமானம் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.

‘இந்த கண்காட்சியில் நமது தமிழகத்தை சேர்த்ந  கலாம் சாட் குழுவினர் தயாரித்த செயற்கோள் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்பை,  ரஷ்ய வர்த்தக துறை அமைச்சர் மனம் திறந்து பாராட்டியதோடு, இந்தியாவிலிருந்து அதிகளவில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கு ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாக ஸ்பேஸ் கிட்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவன பணியை அங்கீரிக்கும் வகையில், ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக துறை – ஸ்பேச் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்து போட்டுள்ளது  என்றும், அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் ரஷ்யா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலாம் சாட் தயாரித்த ரிபாத் சாருக் உள்ளிட்ட 7 மாணவர்களும், மேலும் மூன்று பள்ளிகூட மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.