‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் டீஸர் வெளியீடு…!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் களத்தில் சந்திப்போம். இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள் நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் டீஸர் திங்கள்கிழமை அக்டோபர் 26ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. காதல், காமெடி, ஆக்ஷன் என்று இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.