வெளியானது ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் முதல் பாடல்….!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் களத்தில் சந்திப்போம். இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள் நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யுவனின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

 

You may have missed