ஜீவா,அருள்நிதி இணைந்து ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் களத்தில் சந்திப்போம். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் ப்ரண்ட்ஷிப் பாட்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார் .

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து இந்த படத்தின் உன்னை பார்த்த நாள் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.