யக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா – பூமிகா நடிக்கும் திரைப்படம், “களவாடிய பொழுதுகள்”.

முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ள இதற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘ஐங்கரன் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இன்று, “சேரன் எங்கே.. சோழன் எங்கே என துவங்கும் பாடல் முழுமையாக இன்று வெளியிடப்பட்டது.

மேதின விழாவில் தந்தை பெரியார் வேடமிட்ட சத்யராஜ் கருத்துக்களை பேசுவது போன்ற காட்சியும் தொடர்ந்து பிரபு தேவா, “சேரன் எங்கே.. சோழன் எங்கே..” என்று  என்று துவங்கி, “தந்தை பெரியார் வந்த மண்ணில் மந்தை நரியா வாழ்வது?” என்ற வரிகளுடன் ஆடிப்பாடும் காட்சியும் உள்ளது.

படம் பற்றி தங்கர்பச்சான், “இது காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இந்த படத்தை படைத்திருக்கிறேன்” என்றார்.

 

அந்த பாடல்: