ஜூன் 28-ல் வெளியாகும் ‘களவாணி 2 ” ….!

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘களவாணி 2 ‘ படத்தை வெளியிட பல தடைகளை சந்தித்தது .

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூன் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kalavani 2, Oviya, vimal
-=-