சென்னை:

ருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன்.

காங்கிரஸ் கட்சியின் உராட்சித் தேர்தல் குழுவின் தலைவரான அமெரிக்கை நாராயணனிடம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேட்டோம்.

அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினர் என்று சொல்கிறார். அதற்கு முன்பாகவே கவனிக்க வேண்டிய விசயம்  ஒன்று இருக்கிறது.

கலிக்கோ- ஓ.பி.எஸ்.

ஓ.பன்னீர் செல்வத்தின் கடிதம், மும்பையில் இருந்த கவர்னருக்கு பேக்ஸில் அனுப்பப்பட்டது. அதை கவர்னர் வித்யாசாகர் ஏற்றுக்கொண்டார்.

இதுவே தவறு.

மிக முக்கியமான – முதல்வர் ராஜினாமா –  முடிவை அறிவிக்கும் கடிதத்தை – எப்படி கவர்னர் ஏற்றுக்கொண்டார்?

ஒரு முதல்வரே ராஜினாமா கடிதம் அளிக்கிறார் என்றால், நேரடியாக சென்னைக்கு கவர்னர் வந்திருக்க வேண்டும். தனது ராஜ்பவன் மாளிகைக்கு முதல்வரை அழைத்து நேரடியாக ராஜினாமா கடிதத்தை வாங்கியிருக்க வேண்டும்.

அல்லது, ஓ.பன்னீர் செல்வத்தை மும்பைக்கு அழைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றிருக்கலாம்.

அப்படி நேரடியாக முதல்வரை சந்தித்திக்கும் போது உண்மை நிலையை அறிந்திருக்கலாம்.

ஆனால், பாஜகவின் கவர்னரான வித்யாசாகர், தமிழகத்தில் குழப்பம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். இதன் மூலம் பாஜகவை தமிழகத்தில் காலூன்றவைக்க முயற்சி எடுக்கிறார்.ட

இன்னொரு விசயம்.

ஏற்கெனவே ஓ.பி.எஸ். ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். சசிகலா தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துவிட்டார். இதற்கான தீர்மானத்தை அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்மொழிந்ததே ஓ.பன்னீர்செல்வம்தான்.

அப்படியானால் அந்த சூழிலில் சசிகலாவை, ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் அழைத்திருக்க வேண்டியதுதானே!

அமெரிக்கை நாராயணன்

நான் சசிகலாவையோ, ஓ.பி.எஸ்ஸையோ  ஆதரிக்கவில்லை. ஆளுநர் சட்டப்படி நடந்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறேன். ஆனால் அவரோ, பா.ஜ.க. கட்சிக்காரராகவே செயல்படுகிறார்.

தங்களது சுயநலத்துக்காக… தமிழக அரசியலில் குழப்பமான நிலையை தொடர வைக்கிறார். இதனால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. எதிர்க்கட்சியான தி..மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி வீட்டிலேயே  துப்பாக்கியோடு ஒரு நபர் புகுந்து மிரட்டியிருக்கிறான். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது.  இப்படி மாநிலம் முழுதும் பிரச்சினைகள். ஆனால் மாநில அரசோ எந்தவித செயல்பாடும் இல்லாமல் ஸ்தம்பித்து நிற்கிறது.

இதற்கெல்லாம் காரணம், பாஜகவின் கர்வனர் வித்யாசாகர்தான்.    தமிழகத்தில் பாஜகவை தடம் பதிக்கவைக்க வேண்டும் என்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக கவர்னரை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக எதுவேண்டுமானாலும் செய்யும். அருணாசலப்பிரதேசம் அதற்கு ஒரு உதாரணம். அங்கு நடந்த ஜனநாயக படுகொலைகளை உச்சநீதிமன்றமே கண்டித்தது.

அங்கே பாஜகவின் சித்து விளையாட்டுகள் உச்சத்தை எட்டின. அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ, வெறுத்துப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்போது தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளைப் பார்த்தால் அப்படி ஒரு முடிவுக்கு தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தள்ளுகிறதோ என்று தோன்றுகிறது ” என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார் அமெரிக்கை நாராயணன்.