தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமானவர்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் நடிக்கிறார்.

மலையாளத்தில் இந்தப் படத்திற்கு ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். தமிழில் ‘ரஜினி ரசிகன்’ எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடிப்பதால் படத்திற்கு, ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம்.