“நேர்கொண்ட பார்வை”யில் வித்யாபாலனை தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் நடிகை…!

இயக்குனர் வினோத் இயக்கி வரும் அமிதாப் பச்சனின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

அஜித்துடன் இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைரங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாஜலம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு, ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கல்லி பாய் படத்தில் நடித்த கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் பாடலில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட அனைவருமே பங்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.