சென்னை:

பிரபல சாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் நடை பெற்ற வருவமான வரித்துறை சோதனையில்  இருந்து  1000 ஏக்கர் நிலம் ஆவணங்கள், ரூ 44 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக  வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கல்கி சாமியாருக்கு சொந்தமான சுமார் 907 எக்கர் நிலம் முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

பிரபல சாமியாரான கல்கி சாமியாரின் சென்னை அருகே உள்ள ஆசிரமம் மற்றும் சென்னை மற்றும் நாடு முழுவதும் உள்ள அவரது ஆசிரம கிளைகளில் கடந்த அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையின் முடிவில் 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் போன்ற கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாகவும்,  800கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது, கல்கி குடும்பத்துக்குச் சொந்தமான கோவை, உதகை, சத்தியவேடு, பெல்காம் போன்ற பல பகுதிகளில்  உள்ள சுமார் 907 ஏக்கர் நிலத்தை வருமானவரி முடங்கி யுள்ளதாக அறிவித்து உள்ளது. இது கல்கி பக்தர்களுடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.