கார் விபத்தில் தப்பிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி.,காமராஜ்

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி., காமராஜ் பயணித்துக் கொண்டிருந்த கார், சேலம் அருகே சென்றபோது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காமராஜ் உட்பட 3 பேர் உயிர் தப்பினர்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக எம்.பி. காமராஜ், சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

வேல்முருகன் என்பவர் காரை இயக்க, உதவியாளர் முகமது நாசர்  உடன் சென்றார். சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியை கார் அடைந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது, சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காருக்குள் இருந்த எம்.பி. காமராஜ் உட்பட 3 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You may have missed