கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சசி மாவட்ட  கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்து மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறிதுது, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராபக கிரன் குர்லா ஐஏஎஸ் (Kiran Gurrala, IAS) இருந்து வருகிறார். இவரது நேர்முக எழுத்தராக கள்ளக்குறிச்சி கேசவலு நகரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 47). பணிபுரிந்து வந்தார். இவருக்கு  லலிதா (45) என்ற மனைவியும், அருளானந்தம் என்ற மகனும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதனால் லலிதா சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து மகனுடன் வசித்து வருகிறார். சிவபாலன் கள்ளக்குறிச்சியில் இருந்து, பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிவபாலன் திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை 9 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர், சிவபாலனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சிவபாலனின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மூடி இருந்தது. பின்னர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சிவபாலன் வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூபதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வபாலன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கணவனின் உடலை பார்த்து மனைவியும், தந்தையின் உடலை பார்த்து மகனும் கதறி அழுதனர்.
விசாரணையில் சிவபாலன்  அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பூபதி (30) என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடனை கேட்டு பூபதி தொல்லைப்படுத்தியதால் சிவபாலன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பணிச்சுமை காரணமாக என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,.
சிவபாலன் தற்கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மருத்துவமனைக்கு சென்று சிவபாலன் உடலை பார்த்து வருந்தினர்.  அவரது தற்கொலை சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.