தஞ்சாவூர்:

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக  வரும் 16 ஆம் கல்லணை திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து  இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.   இது அடுத்த மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து குறுவை சாகுபடிப்பாக கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக  தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பயன்பெறும் என கூறப்பட்டுள்ளது.