சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது!

திருச்சி:

ம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்த தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள்  பங்கேற்று கல்லணையில் தண்ணீர் திறந்து விட்டனர். இதன் மூலம் 6 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி  அணைகள் நிரம்பி உள்ளதால்,  உபரிநீர் காவிரி யில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூர்  அணையின் நீர்மட்டம் 112 அடியைக் கடந்துள்ளது. அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடிவீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய்களில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர்  முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடைந்தது.

இந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று முற்பகல் 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் விவசாய சங்க பிரதி பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கல்லணையிலிருந்து காவிரி -, வெண்ணாறு – , கொள்ளிடம் – , கல்லணைக் கால்வாய் – கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

கல்லணையில் இருந்து காவிரியில் 1000 கனஅடி, வெண்ணாறுக்கு 1000 கனஅடி, கல்லணை கால்வாய் 500 கன அடி, கொள்ளிடம் 1000 கனஅடி ஆகிய நான்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.