காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ . 32. 50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையம் ஒப்புதல் அளித்துள்ளது.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு நிறைவுறும் வயலூர் என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

1,191 மீட்டர் நீளத்தில் அமைய உள்ள இந்த இந்த தடுப்பணை, கடல் நீர் வீணாவதை தடுக்கவும், அனுமின் நிலையத்துக்கு தேவையான 2 கோடியே 70 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யவும் உதவும்.

1,500 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 2 கலன்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 330 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பயன்பெறும்.

தடுப்பணை கட்டும் பணியை பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்க நீர்வள துறை முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை 2020- ல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.