நிவர் புயல் : கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சென்னை

நிவர் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்க படுவதால் கல்பாக்கம் அணு மின்நிலைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது உருவாகி உள்ள நிவர் புயல் மேலும் வலுவடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.   இந்த புயல் மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி தமிழக அரசு பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் உள்ளது.  இங்குப் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் அருகில் வசித்து வருகின்றனர்.  புயல் கரையைக் கடக்கும் வரை அணு மின் நிலைய ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.