ல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியில் அமைந்துள்ள  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்  வெகு விமரிசையாக நடைபெற்றது.

கல்பாக்கம் அடுத்த, நெய்குப்பியில், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ஆஞ்சநேயர், கலிகர், வராகர், நரசிம்மர், கருடர் என, ஐந்து முகங்களுடன், 18 அடி உயர ஆஞ்சநேயர் கான்கிரீட் சிலை அமைக்கப்பட்டது.  சிலையின் கீழே  மூலவர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஆஞ்சநேயர் சிலைக்கும், அடுத்து, மூலவர், உற்சவர்களுக்கும், புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அதைத்தொடர்ந்து இரவு   சுவாமி வீதியுலாஹவும் நடைபெற்றது.

இனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

இங்க ஆஞ்சநேயர்  நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார்.

கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் “பிரதிவாதி முகஸ்நம்பி” என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவ ற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.