ப்ரணவ் மோகன்லால்க்கு ஜோடியாகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்…!

பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு மலையாளம் தமிழ் என பிஸியாகிவிட்டார் .

இந்நிலையில், மோகன்லால் மகன் ப்ரணவ் மோகன்லால் ஜோடியாக ‘ஹ்ரிதயம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன். இந்தப் படத்தை வினீத் சீனிவாசன் இயக்குகிறார். தர்ஷனா ராஜேந்திரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அடுத்த வருடம் (2020) ஓணம் பண்டிகைக்கு ‘ஹ்ரிதயம்’ படம் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.