நடிகை ரகுல் 50 சதவீதம் சம்பளம் குறைக்கிறார்..?

கொரோனா லாக்டவுன் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கிறது. கோடிகளில் முதலீடு செய்து உருவாக்கப்பட்ட படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. மறுபக்கம் இதற்காக கோடிக்கணக்கில் வாங்கிய கடன்கள் தயாரிப்பாளர்களை அச்சுறுத்திக் கொண்டிக்ருகிறது.


இந்நிலையில் நடிகர்களும் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினாலும் தயாரிப்பாளர்களால் ஏற்கனவே பேசிய சம்பளம் தர முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதைக்கருத்தில் கொண்டு நடிகர்கள் விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், உதயா, மஹத் ராகவேந்திரா உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைக்க முன்வந்துள்ளனர்.
தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது, இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.