சிவகாசி

ட்டாசுத் தொழில் பாதுகாப்புக்காக தேமுதிக நேற்று சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.   இந்த போராட்டத்தில் விஜயகாந்த்தும் அவர் மனைவி பிரேமலதாவும் கலந்துக் கொண்டனர்.    இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசும் போது அவர் மீது கல் எறியப்பட்டு எறிந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விஜயகாந்த் தனது உரையில், “சுற்றுச் சூழல் பாதிப்பதாக கூறி மத்திய அரசு பட்டாசுக்கு தடை விதித்தது.   அதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.    எனவே சுற்றுச்சூழல் சட்டத்திலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் தேமுதிக தனித்து போட்டியிட  தயாராக உள்ளது.   அரசியலைப் பொறுத்தவரை  கமலும் ரஜினியும் எனக்கு ஜூனியர்கள் தான்.    அரசியலில் நான் அவர்களுக்கு சீனியர்,

பேருந்துக் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தேமுதிக அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.   இதற்காக விரைவில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.”   எனத் தெரிவித்தார்.