ஸ்ருதிஹாசன் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடியா?

கமலஹாசன் –சரிகாவின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.  தமிழில் தற்போது கமல் இயக்கத்தில் சபாஷ் நாயுடு என ஒரு படத்தில் நடித்து வருகிறார்.   அவருக்கும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சேல் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வந்தன.   இது பற்றி ஸ்ருதியை கேட்டதற்கு தன்னுடைய தனிப்பட்ட வாழிக்கையைப் பற்றி பேசினால் தனக்கு பிடிக்காது என கூறி உள்ளார்.

சென்ற வாரம் ஸ்ருதி ஹாசன் தனது தாயார் சரிகாவுக்கு மைக்கேலை அறிமுகப் படுத்தி உள்ளார்.    மூவரும் வெளியில் சென்ற புகைப்படங்களை வெளியிட்ட செய்தியாளர்கள் சரிகா தனது மகளின் திருமணத்துக்கு அனுமதி அளித்து விட்டதாக தெரிவித்தனர்.   ஆனால் இது குறித்து ஸ்ருதி மற்றும் சரிகா இருவரும் ஒன்றும் கூறவில்லை.

இன்று கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமணம் நடந்தது.  அந்த திருமணத்துக்கு ஸ்ருதியுடன், மைக்கேல், கமல் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டனர்.  மைக்கேல் பட்டு வேட்டி சட்டையுடன் வந்திருந்தார்.   மூவரும் இணைந்து வந்தது திருமணத்தில் கலந்துக் கொண்ட திரையுலகப் பிரமுகர்கள் இடையே பரபரப்பை உண்டாக்கியது.    செய்தியாளர்கள்  தாயின் சம்மதத்தைப் பெற்ற ஸ்ருதி தந்தையின் சம்மதத்தையும் பெற்றிருப்பார் எனவும் விரைவில் திருமண அறிவிப்பு வரலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.