’அரசே விழித்தெழு அல்லேல் விலகிவிடு’ கமல் பரபரப்பு அறிக்கை..

க்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டி ருக்கும் டிவிட்டர் மெசேஜில்,’சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும் வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென் கறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்வங்கள் அதிகரிப்பு இவை அனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஓவ்வொரு குடும்பமும் இதை உணரத் துவங்கி விட்டது. அரசே விழித்தெழு அல்லேல் விலகிவிடு’ என தெரிவித்திருக்கிறார்.
அரசின் அலட்சியம் குறித்து டிவிட்டரில் தினமும் கமல்ஹாசன் மெசேஜ் வெளியிட்டு வருகிறார். மக்களை பொருளாதார இழப்பிலிருந்து தமிழக மற்றும் மத்திய அரசும் மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதியதுடன் அறிக்கையும் வெளியிட்டு வருகிறார்.
சமூக அக்கறையுடன் கமல் அரசியல் பேசி வந்தாலும் தனது படப்பிடிப்பு பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்பு தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முழுவேகத்தில் பணிகள் நடக் கின்றன. இதையடுத்து தலைவன் இருக்கி றான் படப்பிடிப்பு தொடங்குகிறார்.
இதற்கிடையில் பிக்பாஸ் 4 ஷோ தொடங்கி நடத்த உள்ளார் கமல்ஹாசன்.

You may have missed