பாலா – கேப்ரியல்லா இடையே நடந்த சண்டைக்கு ஷிவானிதான் காரணமா……?

தீபாவளி என்பதால் டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார் பிக்பாஸ் . பலவகையான பட்டாசுகள் பிக்பாஸ் வீட்டில் யாருக்கு பொருந்தும் என்று கேட்கப்படுகிறது.

முக்கியமாக கேப்ரியல்லா பாம்பு மாத்திரையை சுசித்ராவுக்கு வழங்குகிறார். அப்போது சுச்சியின் முகம் கோவத்தால் அலட்சியம் செய்வதை பார்க்க முடிகிறது.

எலுமிச்சையில் ஆரம்பித்து, சப்பாத்தி, பொங்கலில் மய்யம் கொண்டு பாசிப்பருப்பு பக்கம் சென்று தற்போது புளிசாதத்தில் வந்து முடிந்துள்ளது. அனிதாவுக்கு, ஆரியுடன் இந்த விஷயத்தில் சண்டை வந்து விட்டது. கிச்சனில் சனம், ஆரி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த பிரச்சினையை பேசி முடிக்க அனிதா முன்வர மாட்டார் என ஆரி ஆரூடம் கூறினார்.

பிக்பாஸ் போட்டியின் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்போட்டியில் போரிங் பர்ஃபார்மர் யார் என்று கமல் கேட்டதற்கு, ரமேஷ் பாலாவை சுட்டி காட்டுகிறார். இதை தொடர்ந்து பாலா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இன்னொரு ப்ரோமோவில் கடந்த வாரம் பாலா – கேப்ரியல்லா இடையே நடந்த சண்டை குறித்து கமல் கேள்வி கேட்கிறார். மேலும் அந்த சண்டைக்கு காரணம் என்ன என்று எனக்கு தெரியும் எனவும் கமல் கிடுக்குபிடி போடுகிறார்.