கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டி பி வெளியீடு….!

நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கான காமன் டிபியை வெளியிடுவது இப்போது ட்ரண்ட் ஆகி வருகிறது.

அந்த வரிசையில் நாளை மறுநாள் தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 232 வது படத்தை இயக்கவுள்ள மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலின் காமன் டிபி ஒன்றை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கமல் முறுக்கி விட்ட மீசையுடன், கவச உடை அணிந்து போருக்கு செல்லும் அரசன் போன்று காட்சியளிக்கிறார்.