பெப்பர் அண்ட் சால்ட் தோற்றத்துக்கு மாறும் கமல்ஹாசன்..

கமல்ஹாசன் இளமை முதுமை, ஆண், பெண், ஏன் தசாவதாரத்தில் பாட்டி வேடத் தில் கூட நடித்திருக்கிறார். ஆனால் நேரில் பார்க்கும்போது எப்போதுமே இளமை மிடுக்கோடு வெளியில் வருவார். பிக்பாஸ் ஷோவின் 4வது எபிசோட் தொடங்க உள்ளார் கமல். அதில் முழுக்க அஜீத் பாணியில் பெப்பர் சால்ட் தோற் றத்தில் பங்கேற்று நடத்தவிருக் கிறார்.


பிக்பாஸ் 4ல் நடிகர் இர்பான், நடிகைகள் அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் போன்ற வர்களுடன் நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரத்தில் மோதி பரபரப் பை ஏற்படுத்தியதுடன் கைதாகி ஜாமீனில் வந்த சூரியா தேவியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வருகிறது.
ஷோவில் யார் யாரெல்லாம் அவரிடம் சிக்கப்போகிறார்கள் என்பது சுவாரஸ்ய எதிர்பார்ப்புடன் இருக்கும் என்று தெரிகிறது ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.