ரிஷி கபூரின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்…!

கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

ரிஷி கபூரின் மறைவு குறித்து கமல் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் :-

நம்ப முடியவில்லை சின்டூஜி (திரு ரிஷிகபூர்) எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன் நண்பா. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார் .