வருக! வருக!: ரஜினிக்கு கமல் வாழ்த்து

னிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ரஜினி அறிவித்தள்ளதற்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக கடந்த 26ம் தேதி முதல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துவந்த ரஜினி, இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர், தனிக்கட்சி துவங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதற்கு தற்போது அமெரிக்காவில் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்டப் பணியில் இருக்கும் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டவிட்டர் பக்கத்தில், “சகோதரர்  ரஜினியின் சமூக உணர்வுக்கும்  அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள்! வருக வருக” என்று கமல் தெரிவித்துள்ளார்.